உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை!

புதுச்சேரி: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் என்ற தலைப்பில், ஆன்லைன் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசியதாவது:இந்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.டி.,யில் படிக்க ஜே.இ.இ., நுழைவு தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 2 இயற்பியல், கணிதம் படித்த மாணவர்கள் இத்தேர்வு எழுதலாம். இத்தேர்வை ஆண்டிற்கு 16 லட்சம் எழுதுகின்றனர். அவர்களில் 2.5 லட்சம் பேர் முதல்நிலை தேர்வில் தேரவாகின்றனர். அவர்களுக்கு அடுத்த கட்டமாக 'அட்வான்ஸ்' தேர்வு நடக்கும். அதில் தேர்வாகும் 16 ஆயிரம் பேர், இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.,களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 50 பேர் ஐ.ஐ.டி. மெட்ராசில் சேர்வது மிக பெரிய விஷயமாக உள்ளது. ஐ.ஐ.டி.க்கு உள்ளே வந்து விட்டால், 4ம் ஆண்டில் படிப்பு முடிப்பதற்கு முன்பே சம்பளத்துடன் வேலை கிடைத்து விடும்.அனைவரும் ஐ.ஐ.டி., யில் சேர்ந்து படிப்பதற்காக, பி.எஸ். இளங்கலை அறிவியல் பாடத்தை துவக்கி உள்ளனர். இதற்கு ஜே.இ.இ., தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் படிக்கலாம். கல்லுாரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பிளஸ் 2 முடித்த மாணவர் தனக்கு பிடித்த ஒரு பட்டப் படிப்பை தேர்வு செய்து கொண்டு படித்து, அந்த கல்லுாரி படிப்புடன், தினமும் 3 மணி நேரம் ஒதுக்கி படிக்க முடியும் என்றால், ஐ.ஐ.டி., யில் பி.டெக்., முடிப்பதற்கு இணையான பி.எஸ்., அறிவியல் படிப்பை படிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தால் ஐ.ஐ.டி., டிகிரி உங்களுடன் நிற்கும். ஐ.ஐ.டி.,யில் படிப்பது புத்தகத்தை படித்து மனப்பாடம் செய்து, கட்டுரை எழுதி மார்க் வாங்குவது அல்ல. படித்த படிப்பை வேறு விதமாக அறிவு சார்ந்து சிந்திக்க வைத்து, அதில் திறன் வாய்ந்தவராக மாற்றி அதில் கேள்விகள் கேட்கப்படும்.ஐ.ஐ.டி., மெட்ராசில், பி.எஸ்., இளங்கலை அறிவியலில் டேட்டா சையின்ஸ் என கூறும் ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட் மற்றும் பி.எஸ்., எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு படிப்புகள் உள்ளது.இதில் சேர குவாலிபைர் என்ற தேர்வு நடத்தப்படும். இதை ஐ.ஐ.டி. நடத்தும். இதற்கான பயிற்சியும் ஐ.ஐ.டி., நடத்தும். 4 வாரம் பயிற்சியில் ஒவ்வொரு வாரம் முடியம்போது தேர்வு எழுத வேண்டும். அசைன்மென்டில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தால், தேர்வு எழுத அனுமதிப்பவர். இந்த தேர்வுக்கு வரும் மே 26ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூன் மாதம் பயிற்சி வகுப்பு. ஜூலை 7ம் தேதி நுழைவு தேர்வு நடக்கும். தேர்வில் வெற்றி பெற்றால் ஐ.ஐ.டி. அட்மிஷன் உறுதி.தேவையான திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு பெற்று கொடுத்து உங்களை முன்னேற்றிட கொண்டு வரப்பட்ட திட்டம் தான், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ்' என்ற திட்டம்.பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களாக இருந்தால் படிப்பு செலவில் 75 சதவீதமும், ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால், 50 சதவீத கல்வி கட்டணத்தை ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஏற்றுக் கொள்கிறது. வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. ஏதேனும் ஒரு கல்லுாரியில் சேர்ந்து கொண்டு, இந்த ஐ.ஐ.டி. படிப்பையும் சேர்த்து படித்து வாழ்க்கையில் சாதிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்