உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கல்லுாரி கனவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி கனவு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார்.இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசினார். சவுதி அரேபியா மஜ்மா பல்கலை பேராசிரியார் முகமது யாசிக் காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து 600 மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், மிக எளிய வாய்ப்பு கல்வி, கடின உழைப்பு. இந்த இரண்டு வழிகளை தவிர எளிய குறுக்கு வழிகள் வேற எதுவும் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்