சி.எஸ்.ஐ.ஆர் நிறுவன தினம்
சென்னை: புதுடில்லியில் இயங்கி வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின்(சி.எஸ்.ஐ.ஆர்., ) நிறுவன தினத்தை, சென்னையிலுள்ள கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சிஎம்சி ஆகியவற்றால் தரமணியில் உள்ள சி.எஸ்.ஆர்.ஏ. வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.சிஎஸ்ஐஆர் வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் பொது மக்கள் காலை 9.30 முதல் பிற்பகல் 3:00 மணி வரை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொழில்நுட்பங்கள், உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட 9200க்கும் அதிகமானோர் இந்த வளாகத்தை பார்வையிட்டனர். அவர்கள் தற்போது ஆய்வுகூடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கிய பன்முக ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை நேரில் கண்டு, விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.