முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
சென்னை: அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,25ம் தேதி நடக்க உள்ளது.2024-25 கல்வி ஆண்டில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதும் மாணவ மாணவிகளில் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.