உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ்., எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: தேர்விற்கான விண்ணப்பங்களை https://apply1.tndge.org/dge-notification/NMMS எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு மையங்கள்: மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார அளவிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 22விபரங்களுக்கு: https://dge.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்