அடிப்படை அறிவது அவசியம்!
சமூக மற்றும் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் வகையில், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் 'ஹேக்கத்தான்' போட்டிகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். போட்டிகளில் வெற்றி பெறுவதை விட, பங்குபெறுவதே முக்கியம். ஆகவே தான், எங்கள் கல்வி நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். பாடத்திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். நிகழ்காலத்திற்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உதாரணமாக, எங்கள் கல்வி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வது குறித்தும், அட்வான்ஸ்டு எம்.எஸ். எக்செல் குறித்தும் செயல்முறை பயிற்சி அளிக்கிறோம். மாற்றம் காணும் தொழில்நுட்பம்ஏ.ஐ., தான் எதிர்காலம் என்று சொல்லுகிறோம். ஆனால் அதற்கே ஏராளமான போட்டிகள் உள்ளன. எதிர்காலத்தில் மற்றொரு புதிய தொழில்நுட்பம் வரும். ஆகவே, அடிப்படையை அனைவரும் முறையாக அறிந்துகொள்ள வேண்டும். 'குவாண்டிடேட்டிவ்' திறன்களை வளர்த்துக்கொள்வதில் இன்றைய மாணவ, மாணவிகள் ஆர்வம் செலுத்த வேண்டும். 'இண்டஸ்ட்ரியல் விசிட்' என்பது அனைத்து துறை மாணவர்களுக்கும் அவசியம். மாணவர்களின் படைப்பு திறன்களை வளர்ப்பதற்கான தன்னம்பிக்கை அளவை கணிசமாக மேம்படுத்துவதும் அவசியம். தற்போது 12ம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த துறையில் வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப படிப்பை தேர்வு செய்ய வேண்டும். அதேநேரம், அடிப்படை மற்றும் கோர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.குறிக்கோள்பண்புக் கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்ட அறிவை வழங்கும் தரமான கல்வி மையமாக எங்கள் நிறுவனத்தை மாற்றுவதையும், மாணவர்கள் அவர்களது முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதற்கு ஏற்ப சிறந்த கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலை உருவாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம். இதனால் அவர்கள் சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்க முடியும். மாணவர்களிடம் 'ஸ்டார்ட்-அப்' ஆர்வத்தை ஊக்குவிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.-ப. வெங்கடேஷ் ராஜா, தாளாளர், எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.