போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
கடந்த 2023ம் ஆண்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு பிரிவு துவக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில், பல்வேறு பயிற்சித் திட்டங்கள் இப்பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த 2024-25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், 'மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு தரமான ஆறுமாத கால பயிற்சி வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, எஸ்.எஸ்.சி., -கம்-ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிட பயிற்சியை வழங்க உள்ளது. இருவேறு நுழைவுத் தேர்வுகள் வாயிலாக, இப்பயிற்சிக்கான ஆயிரம் பயனாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது எஸ்.எஸ்.சி., -கம்- ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பயன்பெறலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 13, 2025தேர்வு நடைபெறும் நாள்: மே 31, 2025விபரங்களுக்கு: www.naanmudhalvan.tn.gov.in