உள்ளூர் செய்திகள்

இலவச திறன் பயிற்சி

தமிழக அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்புக்கும் உதவி செய்யப்படுகிறது.துறைகள்:ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன், வேளாண்மை, ஜவுளி, ஆட்டோமோட்டிவ், பியூட்டி அண்டு வெல்னஸ், பி.எப்.எஸ்.ஐ., உற்பத்தி, கட்டுமானம், நுகர்வோர் பொருட்கள், வீட்டுவேலை, ஐ.டி.,-ஐ.டி.இ.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஹார்டுவேர் உட்பட பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.முக்கியத்துவம்:பயிற்சி முடிவில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உறுதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கான சாத்தியமும் உண்டு.ஊக்கத்தொகை:பயிற்சி பெறும் பின்தங்கிய வகுப்பினருக்கு ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொலைதூர மாணவர்களுக்கு பயிற்சியுடன், உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.தகுதிகள்: தமிழகத்தை சேர்ந்த 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட வேலையில்லாத இளைஞராக இருத்தல் வேண்டும். தற்போது, பள்ளி அல்லது கல்லூரியை தொடராதவராகவும், திறன் மேம்படுத்திக்கொள்ள விரும்புபவராகவும் இருத்தல் வேண்டும். 10ம் / 12ம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமா அல்லது பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு வேலை தேடுபவராகவும் இருக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: 'டிஎன் ஸ்கில் வேலட்' எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்வாயிலாக தேவையான தகவல்களை வழங்கி, பதிவு செய்ய வேண்டும்.விபரங்களுக்கு: www.tnskill.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்