உள்ளூர் செய்திகள்

முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள்

தமிழக கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டப்படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசின் சார்பில் இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக 'டான்செட்' எனும் 'தமிழ்நாடு காமன் என்ட்ரென்ஸ் டெஸ்ட்' மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்காக, 'சி.இ.இ.டி.ஏ.,-பி.ஜி.,' எனும் 'காமன் இன்ஜினியரிங் என்ட்ரென்ஸ் டெஸ்ட் - போஸ்ட் கிராஜுவேட்' நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்துகிறது.தேர்வு: டான்செட்படிப்புகள்: * மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மிஷின்ஸ்ட்ரேஷன் - எம்.பி.ஏ., * மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ., தேர்வு: சி.இ.இ.டி.ஏ., - பி.ஜி.,படிப்புகள்: * மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் - எம்.இ.,* மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக்., * மாஸ்டர் ஆப் ஆர்க்கிடெக்சர் - எம்.ஆர்க்., * மாஸ்டர் ஆப் பிளானிங் - எம்.பிளான்.,கல்வித்தகுதிகள்: எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஆகிய பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. அதேபோல், இதர படிப்புகளுக்கும் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில், இதே மதிப்பெண் சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும்.தேர்வு நாள்:எம்.சி.ஏ., - மே 9, 10:00 - 12:00 மணிவரைஎம்.பி.ஏ., - மே 9, 02:30 - 04:30 மணிவரைஎம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மே 10, 10:00 - 12:00 மணிவரைவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10, 2026விபரங்களுக்கு: https://tancet.annauniv.edu/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்