உள்ளூர் செய்திகள்

செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சார்பு நிறுவனங்களில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான, செவிலியர், மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல், டயாலிசிஸ் தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்பம் ஆகிய வேலைவாய்ப்பு அளிக்கும் திறன்மிக்க படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தேர்வுக் குழு வாயிலாக, ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக, மதிப்பெண் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில், அறிவியல் பாடப்பிரிவு படித்து, தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.www.tnmedicalselection.org என்கிற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது செவிலியர் மற்றும் தாதியர் பட்டய படிப்பிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், 0421-2999274 என்கிற எண்ணிலும்; deangmctpr@gmail.com என்கிற இ-மெயில் வாயிலாகவும் உதவி மையத்தை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்