உள்ளூர் செய்திகள்

கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி, சாய் சக்தி செவிலியர் கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடந்தது. சக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் வேம்பணன் தலைமை வகித்தார். சாய்சக்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் கங்கா ஈஸ்வரி வரவேற்றார்.சக்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜானகிதேவி ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி நிறுவன ஆலோசகர் குப்புசாமி, நிர்வாக உறுப்பினர் சதாசிவம், அறங்காவலர் பிரேம் ஆனந்த் பங்கேற்றனர். பி.எஸ்.சி., நர்சிங் முடித்த 141 பேர் உள்பட 177 மாணவிகளுக்கு பட்டம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் நித்தியவேணி நன்றி கூறினார்.விழாவில் பங்கேற்ற கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவிகள் ஆகியோர் பட்டம் பெற்ற மாணவிகளை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்