மாணவிகளுக்கு சைபர் விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் சார்பில், குற்றங்களில் இருந்து விழிப்புணர்வோடு இருப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள், மாணவர்கள் இணையவழி மோசடியில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கான முக்கிய அறிவுரைகள், சைபர் கிரைம் குற்றங்கள், மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி எடுத்தனர்.