மாணவர்களுக்கு அடையாள அட்டை
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நாகையா தலைமை வகித்தார். முன்னாள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சம்பத், பி.டி.ஏ., நிர்வாகிகள் முருகன், அறிவழகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பஞ்., துணைத்தலைவர் ஜெயவேல், 471 மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார். இதில், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.