சென்னை ஐ.ஐ.டி.,யின் எச்.எஸ்.இ.இ
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., கலைத்துறை மற்றும் சமூக அறிவியலில் நுழைவுத்தேர்வை (எச்.எஸ்.இ.இ 2011) நடத்துகிறது. டெவலப்மென்ட் படிப்புகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான படிப்புகளில் ஐந்து வருட ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பிற்காக (எம்.ஏ.,) இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். hsee.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களையும் கையேடுகளையும் பெறலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 19, 2011. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் மே 8, 2011.