உள்ளூர் செய்திகள்

கல்வித்துறையில் வர்த்தக நிறுவனங்கள்

நாட்டின் பெயர்பெற்ற தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாட்டின் தொழில் நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபடுவதன் மூலமாக, தொழில்நுட்ப படிப்புகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை போக்கி, ஊக்குவிக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் வளாகங்களை வெளிநாடுகளிலும் ஏற்படுத்தி, இந்திய கல்வி பட்டங்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த போதுமான நிதி ஆதாரங்களை கொண்டுள்ளவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் பொருட்டு, கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமான அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலின்(ஏ.ஐ.சி.டி.இ.) விதிகள் திருத்தப்பட்டுள்ளன மற்றும் இந்திய கம்பெனிகள் சட்டம், பிரிவு 25 -இன் படி, ஏ.ஐ.சி.டி.இ., கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். தற்போதுவரை, அறக்கட்டளை அல்லது சொசைட்டி என்று பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு மட்டுமே கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய விதிகளின்படி, நல்ல தொழில் நிறுவனங்கள் என்று பெயரெடுத்த அமைப்புகளும் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வாய்ப்பில் கூட்டு முயற்சி எதுவும் அனுமதிக்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்