இக்னோவில் நியூட்ரிஷன் படிப்பு
நியூட்ரிஷன் சம்பந்தமான ஆன்லைன் படிப்புகளுக்கு, இக்னோ விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த படிப்புகள் பிப்ரவரியில் தொடங்குகின்றன. நியூட்ரிஷன் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வழிகாட்டுதலை வழங்கி அத்துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துவதே இந்த நியூட்ரிஷன் தலைமைத்துவ படிப்பின் நோக்கம் என்று இக்னோ அறிக்கை தெரிவிக்கிறது. நியூட்ரிஷன் துறையில் கொள்கை உருவாக்கம், திட்ட நடைமுறைப்படுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவே இந்த படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 15. விரிவான விவரங்கள் இக்னோவின் வலைதளத்தில் கிடைக்கும்.