சிறந்த படைப்புக்காக 10 பள்ளிகளுக்கு பரிசு
மதுரை: மதுரை சேதுபதி பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் பங்கேற்றன.கணிதம், அறிவியல் ரீதியாக 300க்கும் மேற்பட்ட படைப்புகள், மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. வாடிப்பட்டி பெண்கள், சென்னம்பட்டி உயர்நிலை, இளமனுார் ஆதிதிராவிடர், மஞ்சம்பட்டி உயர்நிலை, அவ்வை மாநகராட்சி, காடுபட்டி, நாட்டாமங்கலம் கள்ளர், புளியங்குளம், கே.வெள்ளாகுளம் மேல்நிலை, ஆனையூர் உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளுக்கு தலா ரூ.ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர்.