அனைத்து பள்ளிகளுக்கும் 18 நாட்கள் தசரா விடுமுறை
பெங்களூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, கர்நாடகாவில் அக்., 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை 18 நாட்கள் தசரா விடுமுறையை, கல்வித் துறை அறிவித்துள்ளது.நேற்றைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மைசூரு தசராவை முன்னிட்டு, அக்., 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.அதுபோன்று எஸ்.எஸ்.எல்.சி., காலாண்டுத் தேர்வு நாளை (இன்று) துவங்கி, அக்., 1ம் தேதி வரை நடக்கிறது. 2ம் தேதி காந்தி ஜெயந்தி. எனவே, 3ம் தேதி முதல் அவர்களுக்கு இது பொருந்தும். இந்த விடுமுறைகள் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது.மங்களூரு, உடுப்பியில் தசரா விடுமுறையில், சிறிது மாற்றம் இருந்து வந்தது. ஆனால் இம்முறை அப்படி இல்லாமல், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.