உள்ளூர் செய்திகள்

மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு : பணிகள் துவக்கம்

தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் மாணவ, மாணவியர் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல், ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை பள்ளிகள் சேகரித்து தேர்வுத் துறைக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அரசு பள்ளிகள் தவிர்த்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலிக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் கருவூலங்களில் செலுத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களில் பிராக்டிகல் தேர்வு உள்ள மாணவர்களிடம் இருந்து ரூ.225ம், பிராக்டிகல் தேர்வு அல்லாத மாணவர்களிடம் இருந்து ரூ.175ம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். மாணவர்களின் முழு விவரத்தையும், கல்விக் கட்டண செலானையும் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்