உள்ளூர் செய்திகள்

வளைகுடா நாடுகளில் 2 லட்சம் பேர் வேலை இழப்பு!

உலக பொருளாதார முன்னேற்றம் குறித்த ஆய்வை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி, வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சகம் மற்றும் மாநிலத்தின் வெளிநாடு வாழ் கேரள மக்கள் நலன் காக்கும் துறையின் நிதியுதவியின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.  இந்த அமைப்பு சமீபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மத்திய கிழக்கு நாடு களில் வேலை செய்து வரும் தெற்காசியர், இரண்டு லட்சத்து 64 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.பொருளாதார தேக்கநிலை வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்து இருக்கிறது. கச்சா எண் ணெய் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சொத்துக்களின் மதிப்பு குறைந்தது; பங்குகளின் விலையும் குறைந்தது. முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து, புதிய முதலீடுகளுக்கும் வாய்ப்பு குறைந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக மந்த நிலையே நீடித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றவர்களில் 40 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவை பொறுத்தமட்டில் 61 ஆயிரம் பேர் வேலை இழந்து திரும்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்