உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக 20,471 பேருக்கு பணி

சென்னை: தமிழகத்தில், கடந்த ஆண்டு, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 20,471 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டு உள்ள அறிக்கை:இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க, கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., 11,809 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, 20,471 பேரை, பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில், 9,770 பேர் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.வெளிப்படையான தேர்வு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு கலந்தாய்வின்போது, காலிப்பணியிடங்கள் விபரம், கணினி வழித் தேர்வுகளுக்கான உத்தேச விடைத்தாள், இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டன.தேர்வர்கள், தங்களின் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில், இந்த ஆண்டுக்கான, ஆண்டு திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்