சிவில்சர்வீஸ் தேர்வுக்கு ஜன.,28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் எம்.வி.எம்., கல்லூரியில் நடந்த தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கில் கலெக்டர் வள்ளலார் பேசியதாவது: மாணவ, மாணவிகள் எந்த நிலையிலும் உற்சாகமாக செயல்பட வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., யூ.பி.எஸ்., தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித் தும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் நூலகங்களில் உள்ளன.சமுதாயம் என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது. அதை விட்டு வெளியே வந்து பார்த்தால் தான் எவ்வளவு பிரச்னைகள் உள்ளது என்பது தெரியும். பல்வேறு கேள்விகள் தோன்றி தேடல்கள் ஆரம் பிக்கும் போது, அதற்கான பதில்கள் கிடைக்கும்.படிப்பில் தங்க மெடல் பெற்றவர்களும், முதல் இடம் பெற்றவர்களும் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக முடியும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். மாறுபட்ட சிந்தனைகளால் தான் பல மேதைகள் உருவாகி உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய் தால் மட்டுமே வேலை கிடைத்து விடாது. தொடர் ந்து முயற்சிகள் செய்ய வேண்டும்.திண்டுக்கல்லில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அரசு அனுமதியுடன், கல்லூரிகளின் உதவியுடன் தொடங்கப்பட உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், ஜன., 28ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.