வட அமெரிக்காவில் 36வது தமிழ் விழா
வட அமெரிக்கா: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் வெள்ளி விழா கண்ட சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்துநடத்தும் பேரவையின் 36வது தமிழ் விழா கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோவில் ஜூன் 30, ஜூலை 1-2 தேதிகளில் தொன்மை, தமிழரின் பெருமை என்ற கருப்பொருளுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.இந்த மாபெரும் 36 ஆவது பேரவைத் தமிழ் விழா, ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை பலவிதமான போட்டிகளும், நடனம், நாடகம், பட்டிமன்றம், யோகா, மரபு சார்ந்த கலைகள்,மற்றும் கலந்துரையாடல்களுடன் நடைபெற்றது. விழா மூன்று நாட்களும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கர்நாடக பாடகி சுதா ரகுநாதனின் தமிழ் இசையும், நாதஸ்வர கலைஞர்களின் இசையுடனும் மங்கள விழா துவங்கியது. இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்த்தின் இசையுடனும் பின்னணி பாடகி சித்ரா மற்றும மூக்குத்தி முருகன், வேல்முருகன், விஜய் பிரகாஷ் , பிரியங்கா , மானசி இசையுடன் கலந்த விழா பெரிய விருந்தாக அமைந்தது. அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு அனைவரையும் கவர்ந்தது. பிரதீப் ஸ்வாமிநாதனின் இசைவடிவில் திருக்குறள் அனைவரையும் கவர்ந்த வண்ணமாக இருந்தது.விழாவில் இணைவழியில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் வருகை தந்து விழாவை சிறப்பித்தார். திரைத்துறையை சார்ந்த சசிகுமார், கரு பழனியப்பன் மற்றும் துணைநடிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும்கலந்து கொண்டனர்.