அரசு பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, பாடம் சார்ந்த அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில் பத்திரக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் காண்டீபன் ஏற்பாட்டின் பேரில், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் உண்மை, அமுதா, ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.