உள்ளூர் செய்திகள்

கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் பயன்பாடு

கோவை: 'இன்டர்நெட் அண்டு மொபைல் அசோசியேஷன் ஆப் இண்டியா' தரவுகளின்படி, தமிழகத்தின் ஸ்டார்ட்அப் தொழிற்சூழல் குறித்த, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, ஊரகப்பகுதிகளில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது.கடந்த 2024 தரவுகளின் படி, இந்தியாவில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடிக்கும் அதிகம். 2030ல் இது, 50 சதவீதம் அதிகரித்து, 150 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 88 கோடி; இது, 2030ல் 120 கோடியாக அதாவது, 35 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புறங்களில் தற்போது 39.7 கோடி பேரும், ஊரகங்களில் 48 கோடி பேரும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இது வரும் 2030ல், முறையே 54 கோடியாகவும், 70 கோடியாகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களில், ஆண்களின் எண்ணிக்கை 47 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 41 கோடி ஸ்மார்ட்போன்களின் பயன்பாடே, இணைய சேவை மக்களிடையே இந்த அளவுக்கு ஊடுருவ காரணம் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்