யு.பி.எஸ்.சி., தேர்வில் 42 சதவீதம் தேர்வாளர்கள் ஆப்சென்ட்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் 42 சதவீதம் தேர்வாளர்கள் ஆப்சென்ட் ஆகினர். மதுரை உட்பட 9 மாவட்டங்களை சேர்ந்த 9,697 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 31 மையங்களில் காலையில் நடந்த தாள் 1ல், 4,063 பேர் பங்கேற்றனர். பிற்பகலில் நடந்த தாள் 2ல், 3,978 பேர் பங்கேற்றனர். முதல் தாளில் 42 சதவீதம் பேரும், பிற்பகலில் 41 சதவீதம் பேரும் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மைய பார்வையாளராக தொல்லியல் துறை கமிஷனர் கார்த்திகேயன், மாநில தகவல் மைய கமிஷனர் தர்மேந்திரராவ் யாதவ் இருந்தனர். கலெக்டர் சுப்ரமணியன் தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆவின் பொது மேலாளர் கிறிஸ்டி, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி, யு.பி.எஸ்.சி., அலுவலர் பிஸ்வாஸ் மேற்பார்வையில் 12 கண்காணிப்பு குழு, தேர்வு மையங்களை சோதனையிட்டன.