சென்னை ஐ.ஐ.டி.,யில் 50ம் ஆண்டு விழா
இதுகுறித்து, ஐ.ஐ.டி., அலுமினி அலுவலக துறையின் ஆலோசகர் நாகராஜன் கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., தொடங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சென்னை ஐ.ஐ.டி.,யில் இதுவரை படித்து பட்டம் பெற்ற 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் தங்கள் எண்ணங்களை, இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதேபோல், ஐ.ஐ.டி., வளர ஒத்துழைப்பாக இருந்தர்வர்களும், இந்த கொண்டாட்டத்தில் கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு நாகராஜன் கூறினார்.