உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்கள் 58 பேருக்கு அடையாள அட்டை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில், 58 பேருக்கு, புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், பாலக்காடு ரோடு, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.தலைமையாசிரியர் முருகேஷ் தலைமை வகித்தார். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, வட்டார கல்வி அலுவலர் குளோரிஸ்டெல்லா, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் காயத்ரி, கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், கண், மனநலம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் பங்கேற்று, மாணவர்களை பரிசோதித்து, உரிய மருத்துவ சான்றிதழ்களை வழங்கினர். மொத்தம், 194 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 58 பேருக்கு, புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமை, சிறப்பு பயிற்றுநர்கள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்