ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் கலந்தாய்விற்கு அழைப்பு
27ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் 6049 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 1430 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. 15 மாணவர்கள் கலந்தாய்விற்கு வந்தும் பாடம் எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். மீதமுள்ள 4604 மாணவர்கள் அவர்கள் விரும்பிய இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணையையும் பெற்றுக் கொண்டனர். பொதுவாக காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். ஆனால் புதன்கிழமை ஏராளமான மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்ததால் கலந்தாய்வு முடிய இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது.