உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரிகளில் 68 ஆயிரம் இடங்களில் சேர்க்கை

தமிழகத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில், முதலாமாண்டில், ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுவதாக இருந்தது. முடிவில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படாமல் விண்ணப்பங்கள் மட்டும் ஒற்றைசாளர முறையில் பெறப்பட்டு, அந்தந்த கல்லுாரிக்கான தரவரிசை பட்டியல் நேரடியாக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.கலந்தாய்வுக்கு பொதுவாக 1:5 அல்லது 1:10 என்ற முறையில் மாணவர்கள் அழைக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் 1:1 என்ற அடிப்படையில் அழைக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால், முதல் இரண்டு சுற்று கலந்தாய்வு முடிந்தும் மாநில அளவில் 40 சதவீத இடங்கள் காலியாகவே இருந்தன. நாளை, இரண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் 22ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கும் கல்லுாரிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை பணி தொடர்ந்து நடந்து வருவதாக, கல்லுாரி முதல்வர்கள் பலர் புலம்புகின்றனர். வகுப்புகள் துவங்கவுள்ள நிலையிலும், 36 சதவீத இடங்கள் காலியாகவுள்ளன.அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், சேர்க்கை செயல்பாடுகளில் தவறான வழிமுறைகளால் பெரும்பாலான கல்லுாரிகளில் காலியிடங்கள் தற்போதும் உள்ளன. இதுவரை 64 சதவீத இடங்கள் மட்டுமே நிறைந்துள்ளன. அனைத்து கல்லுாரிகளுக்கும் ஒரு விண்ணப்பம் பெறப்பட்டது. ஒரு மாணவர் 100க்கும் மேற்பட்ட கல்லுாரிக்கு விண்ணப்பித்து இருப்பார். அனைத்து கல்லுாரி தரவரிசை பட்டியலிலும் அவர் இடம் பிடித்து இருப்பார். இதன் காரணமாக 1:1 என்ற அழைப்பால், முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பல இடங்கள் காலியாகவே இருந்தன. தெளிவான திட்டமிடல் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்