ஆசிரியர்களுக்கு கொரோனா
தாம்பரம்; அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்திலுள்ள, அரசு உதவிபெறும் பள்ளியில், 15ம் தேதி, ஒரு ஆசிரியருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. சுகாதாரத் துறை அதிகாரிகள், பள்ளியை ஆய்வு செய்தனர். இதையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவர்கள், மாணவியர், ஆசிரியர்கள் என, 80 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில், நேற்று முன்தினம், மேலும் இரு ஆசிரியைகளுக்கு தொற்று உறுதியானது. இதில், மூவர் தவிர மற்றவர்கள் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று முதல், 22ம் தேதி வரை, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.