உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்புத்துார்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை சோதனை செய்வதற்கு பி.எட்., படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்புத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வட்டாரத் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஸ்ரீ ரங்கராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். திருப்புத்துார் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்