உள்ளூர் செய்திகள்

சேமிப்பு அவசியம்!

சிக்கனத்தின் அவசியத்தை அனைவரும் உணரும் வகையில், ஆண்டுதோறும் அக்., 30ல் உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமித்தால், அதன் வாயிலாக குடும்ப தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம்; எதிர்பாராத செலவுகளையும் சமாளிக்க முடியும்.சேமிப்பின் அவசியத்தை பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இன்றை சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதை உணர்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை, எதிர்கால தேவைக்கு மக்கள் சேமிக்க வேண்டும். சேமிப்பே ஒருவரது எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுகிறது. சேமிப்பு மட்டுமல்ல; அதை சரியான விதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடும் வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும். சேமிப்போம்; சிறப்பாக வாழ்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்