மருத்துவ கருத்தரங்கு
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை அப்போலோ டையக்னொஸ்டிக் நிறுவனத்தின் தலைமை மருத்துவர் மார்க்குவஸ்ராஜ் காய்ச்சலின் அறியப்படாத காரணங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.நோய்கள் வருவதை எப்படி தடுப்பது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஷா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் மற்றும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.