மாணவர்களுக்கு விருது
காஞ்சிபுரம்: விதைகள் தன்னார்வ அமைப்பின், 11வது ஆண்டு விழா, மூன்றாம் ஆண்டு ஒரு லட்சம் பனை விதை நடவு செய்யும் நிறைவு விழா, தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா, வடக்குப்பட்டில் உள்ள திருவேனி அகாடமியில் நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலர் ரவி மீனா, காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிறந்த தேசிய பசுமைப்படை கொண்ட பள்ளிக்கான விருதை, திருவேணி அகாடமி பள்ளிக்கும், சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட கல்லுாரிக்கான விருது, ஆதி கல்லுாரிக்கும் வழங்கினார்.காஞ்சி அன்னசத்திரம் மோகனுக்கு நேர்மைக்கான விருது வழங்கப்பட்டது. மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வரும், 430 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.