மதுரையில் கவியரங்கம்
மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில் என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா.வரதராசன் முன்னிலை வகித்தனர்.கவிஞர்கள் சமயக்கண்ணு, ராம பாண்டியன், வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், முருகபாரதி, அனுராதா, நாகவள்ளி ஆகியோர் கவிதை பாடினர். கவிஞர் ரவி தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்கு வாழ்த்தினர்.பறம்பு நடராசன், சுந்தர கிருஷ்ணன், ராம பாண்டியனுக்கு ஆதி சிவம் தென்னவன் விருது வழங்கினார். மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜன் உள்ளிட்டோருக்கு துணைச் செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.