ஆன்லைன் படிப்புகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை மற்றும் ஆன்லைன் கல்வி மையம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., ஆகிய ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.படிப்புகள்:எம்.பி.ஏ., - ஜெனரல் மேனேஜ்மெண்ட், டெக்னாலஜி மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பினான்ஸ் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், ஹெல்த் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட்.எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ்தேர்வு செய்யப்படும் முறை: எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாக நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நாகர்கோயில், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நுழைவுத்தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 26விபரங்களுக்கு: https://cde.annauniv.edu/