அவகாசம் நீட்டிப்பு
சென்னை: உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய செப்.,9 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினிவழித் தேர்வு நடந்தது. இதில் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தாள் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் ஆக.,23ம் தேதி வெளியிடப்பட்டது. உத்தேச விடைகள் மீது மேல்முறையீடு செய்ய நேற்று வரை அவகாசம் வழங்கியிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய முடியாத காரணத்தால் செப்.,9 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.