செமிகண்டக்டர் இயக்கம்
சென்னை: தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030 என்ற ஐந்தாண்டு கால திட்டம், 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*வரும் நிதியாண்டில், 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்படும்*சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயன்பெற, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம்; விழுப்புரம், சாரம்; கரூர், நாகம்பள்ளி; திருச்சி, சூரியூர்; மதுரை, கருத்தபுளியம்பட்டி; ராமநாதபுரம், தனிச்சியம்; தஞ்சை, நடுவூர்; திருநெல்வேலி, நரசிங்கநல்லுார் ஆகிய ஒன்பது இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாயில், புதிய தொழிற்பேட்டைகளை, சிட்கோ உருவாக்கும். இதன் வாயிலாக, 17,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்*கலைஞர் கைவினை திட்டத்தில், 19,000 கைவினைஞர்களுக்கு உதவும் வகையில், மானிய நிதியாக, 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.