பல்திறன் போட்டிகள்
திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான 'க்வெஸ்ட் 2026' பல்திறன் போட்டிகள் நடந்தன.கல்லுாரி முதல்வர் அசோக் குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் அனிதா வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் பேசினார். மதுரை விருதுநகர், சிவகங்கை தென்மாவட்டங்களின் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஓவியம், பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி உள்ளிட்ட 33 வகையான பல்திறன் போட்டிகள் நடந்தது.எஸ்.பி.ஒ.ஏ., பள்ளி முதலிடம், டி.வி.எஸ்., பள்ளி 2ம் இடம் வென்றனர். பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரி பதிவாளர் ராஜாராம் தலைமை வகித்தார். வணிகக் கடற்படை அதிகாரி கலைமணி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அஸோஸியேட் டீன் பிரசன்னா நன்றி கூறினார்.