சர்வதேச கருத்தரங்கு
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லூரி தமிழ்த்துறை, கோவை சர்வதேச தமிழ் ஆய்விதழ் சார்பில் தமிழ் இலக்கியத்தில் மெய்யியலும் தத்துவமும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.கல்லுாரிச் செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தார். முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் கார்த்திகா தேவி வரவேற்றார். பேராசிரியர் தீபா அறிமுக உரையாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலை மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம், சர்வதேச தமிழ் ஆய்விதழ் முதன்மை பதிப்பாசிரியர் சுரேஷ், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பரணிராணி பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர்.