யூ.பி.எஸ்.சி.,யின் அறிவிப்பு
மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும் யூ.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பாக துணை இயக்குனர் மற்றும் லேபர் என்போர்ஸ்மெண்ட் அதிகாரிகளைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகளுக்கு பணி நியமனம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்புயூ.பி.எஸ்.சி.,யின் துணை இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்க 38 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். லேபர் என்போர்ஸ்மெண்ட் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதிதுணை இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.வி.எஸ்.சி., அல்லது பி.வி.எஸ்.சி., அண்டு அனிமல் ஹஸ்பெண்டரி பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மெடிசின், வைராலஜி, மைக்ரோபயாலஜி, இம்யூனாலஜி, பேரசைட்டாலஜி, வெர்டினரி பப்ளிக் ஹெல்த் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் எம்.வி.எஸ்.சி., பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆராய்ச்சி, பயிற்சி, உற்பத்தி, ரெகுலேஷன், தரக் கட்டுப்பாடு ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் தடுப்பூசித் துறையில் பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மாநில அல்லது இந்திய வெர்டினரி கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயத் தேவையாகும். யூ.பி.எஸ்.சி.,யின் லேபர் என்போர்ஸ்மென்ட் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக காமர்ஸ், எக்கனாமிக்ஸ், சோசியாலஜி, சோசியல் ஒர்க் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சட்டம், லேபர் ரிலேஷன்ஸ், லேபர் வெல்பேர், லேபர் லா, சோசியாலஜி, காமர்ஸ், சோசியல் ஒர்க், சோசியல் வெல்பேர், பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பர்சானல் மேனேஜ்மென்ட் ஆகிய ஏதாவது பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் துறைகளில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை உண்டு. விண்ணப்பிக்கும் முறையூ.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் மூலமாக செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி.,எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு 03.03.2011க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முகவரிUnion Public Service Commission,Dholpur House, Shahjahan Road,New Delhi - 110069