பிளஸ் 1 விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 1 தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள், ஆக., 26ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் தேர்வர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டீற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஆக., 31ம் தேதி காலை 10 மணிமுதல் செப்., 2ம் தேதி மாலை 5 மனிக்குள் அருகிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை செலுத்தி, ஒப்படைக்க வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு பாடம் ஒன்றிற்கு தலா 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயரியல் பாடத்திற்கு ரூ. 305ம், பிற பாடங்களுக்கு தலா ரூ.205ம் செலுத்த வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.