உள்ளூர் செய்திகள்

கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி: பாசி, கண்ணாடி மணி கண்டெடுப்பு

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையில் பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் நிலங்களில் ஜூன் 18ல் தொடங்கியது. கீழடியில் 12 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக இரு குழிகள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இரண்டு அடி ஆழத்தில் இரு குழிகளிலும் பாசி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே வட்டப்பானை மூடியுடன் கூடிய பானைகள் கிடைத்த இடங்களின் வெகு அருகே 10ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்திருக்க வாய்ப்புள்ளன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்