உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின்படி செயல்படும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள், வழக்கமாக ஆண்டுதோறும், நவம்பரில் வெளியிடப்படும்.ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் செயல்முறை தேர்வும், மார்ச்சில் எழுத்து தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 30 சதவீத பாடங்களை மத்திய அரசு குறைத்தது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா அல்லது &'ஆன்லைன்&' வாயிலாக நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சமீபத்தில், ஆசிரியர்களுடன், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக உரையாடினார். அதன்பின், &'டிச., 31ல், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்&' என, தெரிவித்தார்.அதன்படி, ரமேஷ் பொக்ரியால், வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கான செயல்முறை தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கும். எழுத்து தேர்வுகள், மே, 4ல் துவங்கி, ஜூன், 10ல் முடிவடைகின்றன. தேர்வு முடிவுகள், ஜூலை, 15க்குள் வெளியிடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்