உள்ளூர் செய்திகள்

மதுரையில் 1249 பள்ளிகள் ஜொலிக்க நடவடிக்கை

மதுரை: மதுரையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் அனைத்து வகை அரசு பள்ளிகளில் நடக்கும் துாய்மைப் பணிகளை சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார்.இத்திட்டத்தின்கீழ் 1249 அரசு தொடக்க, உயர், மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி முக்கியத்துவம் உணர்தல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு செயல்பாடுகள் நடந்து வருகின்றன.இவற்றில் சிறப்பு செயல்பாடாக பள்ளிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளி, மங்களக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டார்.அவர் பேசுகையில் பள்ளி வளாகம், அறைகளை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். வளாகத்தில் சேரும் குப்பைகளை எரிக்க கூடாது. தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்து மக்கும் மக்காத குப்பை என பிரித்து உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டிகளை துாய்மையாக வைக்க வேண்டும் என்றார்.அனைத்து அரசு தொடக்க பள்ளிகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் சிறப்பு செயல்பாடாக ஜன.,8 முதல் 10 வரை சிறப்பு துாய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக ஒரு பள்ளிக்கு தலா ரூ.1000 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பள்ளிகளில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்காக ரூ.4.86 கோடி ஒதுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்