பட்ஜெட்டில் ரூ.170 கோடி ஒதுக்கீடு பெற்ற யு.பி.எஸ்.சி.
புதுடில்லி: 2014ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், UPSC அமைப்பிற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. UPSC தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குதல் மற்றும் அந்த அமைப்பின் இதர நிர்வாக செலவுகள் மற்றும் அந்த அமைப்பு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக செலவிடப்படும். கடந்தாண்டு பட்ஜெட்டில், UPSC அமைப்பு, தனது பங்காக ரூ.166.64 கோடி பெற்றது. அதைவிட, இந்தாண்டு, ரூ.3.5 கோடி வரை அதிகம் பெற்றுள்ளது. 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில் உயர்கல்விக்கென ஒதுக்கப்பட்ட ரூ.24,485 கோடியோடு ஒப்பிடுகையில், 2014-15ம் ஆண்டில், அத்துறைக்கு 27,656 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம். இது 12.9% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.