குரூப்-2 போட்டித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்
வரும் 30ம் தேதி நடக்க உள்ள, குரூப்-2 தேர்வுக்கு, ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 25ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த மாவட்ட டி.ஆர்.ஓ.வை அணுகலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக, 6,000 த்திற்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குரூப்-2 போட்டித்தேர்வு, வரும் 30ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., ஹால் டிக்கெட் அனுப்பி வருகிறது.வரும் 25ம் தேதிக்குள், ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், உடனடியாக அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலரை (டி.ஆர்.ஓ.,) அணுகி, தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரங்களைக் காட்டி, ஹால் டிக்கெட் பெறலாம் என்றும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களாக இருந்தால், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை அணுகலாம் என்றும், டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.