உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும்- ராமதாஸ்

மே 3ம் தேதி நடைபெறவிருக்கும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யவேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதும், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கவை.கொரோனா காலத்தில், மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட, சரியான நடவடிக்கை இதுவாகும். சி.பி.எஸ்.இ., 10மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என, பா.ம.க., தான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை, பா.ம.க.,வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம், சி.பி.எஸ்.இ., போன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்