உள்ளூர் செய்திகள்

செப்., 2ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் செப்டம்பர், 2ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்க உள்ளார்.அடுத்த நாள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இவ்விழாவில் அவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்